கேன்ஸ் திரைப்பட விழாவின் 77ஆவது நிகழ்ச்சியில் ஓர் இந்திய நடிகை கேன்ஸ் 2024இல் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா, ’தி ஷேம்லெஸ்’ படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான ’அன் செர்ட்டன் ரெகார்ட்’ பரிசை வென்றுள்ளார். ’தி ஷேம்லெஸ்’ படத்தினை பல்கேரிய திரைப்படத் தயாரிப்பாளர் கான்ஸ்டான்டின் போஜனோவ் எழுதி, இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம், ஒரு போலிஸ் அதிகாரியைக் கொன்று தில்லியின் பாலியல்தொழில் விடுதியில் இருந்து தப்பித்து, வடஇந்திய பாலியல் தொழிலாளர்களின் சமூகத்தில் வாழும் ரேணுகா, அங்கு 17 வயது தேவிகாவுடன் காதலைத் தொடங்குகிறார். அனைத்து எதிர்ப்புகளுக்கும் எதிராக, அவர்கள் சுதந்திரத்திற்கான பாதையை நோக்கி முயற்சிக்கிறார்கள் என்பதனையே கருவாகக் கொண்டிருக்கும்.
அனசுயா, தனது வெற்றியின் மூலம், இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார். அனசுயா அளித்த பேட்டியில், ”எங்கள் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, நான் பரவசத்துடன் நாற்காலியில் இருந்து குதித்தேன்!"
அனசுயாவைத் தவிர, ’சன்ஃப்ளவர்ஸ் வேர் தி ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ’ முதலிடத்தையும் மற்றும் ’பன்னீஹுட்’ மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் திவ்ய பாரதி!

கிண்டல் - சிறந்த நடிகைக்கான விருது..! ரஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!

லாஸ் ஏஞ்சலீஸ் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படும் மம்மூட்டி - மோகன்லாலின் பேட்ரியாட்!

நடிகையின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக எடிட் செய்து பதிவிட்டவர் கைது!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


