பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8500 உதவித் தொகை: ராகுல்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, மாதந்தோறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.8500 வரவு வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8500 உதவித் தொகை: ராகுல்
Updated on
1 min read

பிகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மாதந்தோறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.8500 வரவு வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பிகாரில் உள்ள பக்தியார்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ”நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு இருப்பதால், நரேந்திர மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், 2022ஆம் ஆண்டில் நரேந்திர மோடி அரசால் அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வதுடன், ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.8500 வரவு வைக்கப்படும்”

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8500 உதவித் தொகை: ராகுல்
நாட்டு மக்களே! உங்கள் வாக்கு ஜனநாயகத்தை காப்பாற்றும்: ராகுல் காந்தி

காங்கிரஸ், சமாஜவாதி, ஆம் ஆத்மி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியின் கீழ் மக்களவைத் தேர்தலை சந்தித்து வருகின்றன.

6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com