
டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கெயர் தெல்விக் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்திற்கான போட்டி மெக்சிகோவில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. இதன் இறுதிச்சுற்றில் டென்மார்க், வெனிசுலா, மெக்சிகோ, நைஜீரியா, தாய்லாந்து நாட்டு அழகிகள் பங்குபெற்றனர்.
ஆரம்பம் முதலே கவனம் ஈர்த்த டென்மார்க் அழகி விக்டோரியா கெயர் தெல்விக் (21) இறுதிச்சுற்றில் நடுவர்களின் கேள்விக்கு, “‘நீங்கள் எங்கிருந்து வந்தாலும், உங்கள் கடந்த காலம் எதுவாக இருந்தாலும் அதை உங்கள் பலமாக மாற்ற நீங்கள் எப்போதும் தேர்வு செய்யலாம்.” எனப் பதிலளித்துள்ளார்.
இந்த பதிலால் கவரப்பட்ட நடுவர்கள் இந்தாண்டின் உலக அழகியாக விக்டோரியா கெயர் தெல்விக்கை அறிவித்தனர்.
இவரே டென்மார்க்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உலக அழகியாவார். புதிய வரலாற்று சாதனை படைத்த விக்டோரியா தொழில்முனைவராகவும் இருக்கிறார்.
இரண்டாவது இடம் நைஜீரியாவை சேர்ந்த சிடிம்மா அடெட்ஷினாவுக்கும் மூன்றாவது இடம் மெக்சிகோவை சேர்ந்த மரியா ஃபெர்னாண்டாவுக்கும் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.