முச்சந்தியில் இளைஞனால் தாக்கப்பட்ட சிறுமி! மனசாட்சியின்றி வேடிக்கை பார்த்த மும்பைவாலாக்கள்! (வீடியோ இணைப்பு)

இந்தத் தாக்குதல் தொடர்பாக சிறுமியின் சகோதரி சம்பந்தப்பட்ட இளைஞனின் தாயாரிடம் சென்று புகாரும் அளித்திருக்கிறாள். ஆனால், அதற்கு அந்தத் தாய் அளித்த பதிலோ; ‘யாரும் இன்னொஸண்ட் இல்லை’ என் மகனுக்கு அத்தனை
முச்சந்தியில் இளைஞனால் தாக்கப்பட்ட சிறுமி! மனசாட்சியின்றி வேடிக்கை பார்த்த மும்பைவாலாக்கள்! (வீடியோ இணைப்பு)

கடந்த 17 ஆம் தேதி மும்பை, நேர்நகர் பகுதியில் வழக்கம் போல பள்ளிச் சிறுமியொருத்தி டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவளது வழியில் திடீரெனக் குறுக்கிட்ட இளைஞன் ஒருவன் அந்தச் சிறுமி எதிர்பாராத நேரத்தில் சரமாரியாக அவளது முகத்தில் தாக்கத் தொடங்கினான். தக்குதலுக்கு சிறுமி எதிர்ப்புக் காட்டியதும் அவனது வேகம் இன்னும் அதிகமானது. அவனது முரட்டுத்தனமான அடிகளால் அதிர்ச்சியடைந்து அச்சிறுமி மயங்கி விழுந்து விட அவளைத் தூக்கி விடக்கூட மனமின்றி அப்போது அங்கிருந்த மக்கள் அச்சம்பவத்தை வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். அதற்கான சாட்சியாக அப்போது அங்கே பதிவான சிசிடிவி வீடியோ பதிவுகள் உள்ளன.

அந்த வீடியோ காட்சி; 

இந்தத் தாக்குதல் தொடர்பாக சிறுமியின் சகோதரி சம்பந்தப்பட்ட இளைஞனின் தாயாரிடம் சென்று புகாரும் அளித்திருக்கிறாள். ஆனால், அதற்கு அந்தத் தாய் அளித்த பதிலோ; ‘யாரும் இன்னொஸண்ட் இல்லை’ என் மகனுக்கு அத்தனை கோபம் வரும் அளவுக்கு, உன் தங்கை என்ன செய்தாளோ?! என்பதாகவே இருந்திருக்கிறது. ஒரு தாயின் இத்தகைய பொறுப்பற்ற பதிலைக் கேட்டு நொந்து போன பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் காவல்துறையில் புகார் அளிக்கவே; தற்போது அந்த இளைஞனின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 (கொடுமையான ஆயுதத்தால் வலியத் தாக்குதல்) பிரிவு 506( மிரட்டலுக்கான குற்றவியல் தண்டனைப் பிரிவு) எனும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. காவல்துறை வழக்குப் பதிந்தாலும் இந்த நிமிடம் வரை, தாக்கப்பட்ட சிறுமி, தாக்கிய இளைஞ யார் என்ற அடையாளம் வெளியாகவில்லை எனத்தெரிகிறது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த மும்பை சாலையில், சிறுமி ஒருத்திக்கு நேர்ந்த இந்தச் சம்பவமும், அதில் மக்கள் தலையிடாமல் ஒதுங்கிச் சென்ற பாவனையையும் காணும் போது சிறுமிகள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளில் தலைநகர் டெல்லிக்கு இணையாக மாறிக் கொண்டிருக்கிறது என்று சந்தேகமாக இருக்கிறது. இம்மாதிரி கண் எதிரில் ஒரு பள்ளிச்சிறுமி ஆணொருவனால் தாக்கப்படும் போது சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது என்ன மாதிரியான மனநிலை எனப் புரியவில்லை.

Thanks to yahoo.com & ANI NEWS.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com