ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

ஃப்ரீஸரில் மறைத்தது முன்னாள் காதலியின் சடலமா? இந்நாள் காதலியுடன் இளைஞர் கைது!

ஒருவேளை ஃப்ரீஸரில் இருப்பது ஷனான் கிரேவ்ஸின் சடலம் இல்லையெனில் காணாமல் போன முன்னாள் காதலி என்னவானார்? என்பதைச் சொல்லும் நிர்பந்தமும் இப்போது நோவாவுக்கு இருக்கிறது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2017, 0:46 pm IST

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தைச் சேர்ந்த நோவா அங்குள்ள யங்ஸ்டவுனில் தனது காதலி ஷனான் கிரேவ்ஸுடன் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென ஷனான் கிரேவ்ஸ் கடந்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி காணாமல் போனார். காணாமல் போன காதலி குறித்த வருத்தங்கள் எதுவுமின்றி நோவா தனது புதுக்காதலியான காத்ரினா லாய்டனுடன் மீண்டும் அதே வீட்டில் முன்பு போலவே வசிக்கத் தொடங்கினார்.

நோவா குடியிருந்தது வாடகை வீடு. நேற்று செவ்வாயன்று வீட்டு உரிமையாளரை அணுகிய நோவா, மின்சார சப்ளையில் ஏற்படும் மாற்றங்களால் அடிக்கடி தன் வீட்டு ஃப்ரீஸர் பழுதாகி விடுவதால் உள்ளிருக்கும் இறைச்சி கெட்டுப் போவதாகக் கூறி ஃப்ரீஸரை வீட்டு உரிமையாளரின் பேஷ்மெண்ட் அறைக்கு மாற்றிக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறார். இப்படிப்பட்ட விண்ணப்பங்கள் அங்கே சகஜம் என்பதால் வீட்டு உரிமையாளருக்கு முதலில் சந்தேகம் எதுவும் வரவில்லை. ஆனால் பேஷ்மெண்ட் அறைக்கு மாற்றப்படவிருந்த ஃப்ரீஸர் யூனிட் திறக்கமுடியாத அளவுக்கு பேட்லாக் கொண்டு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டதும் அவருக்கு என்ன தோன்றியதோ! உடனடியாக சந்தேகம் வலுக்க காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில்  நோவாவை விசாரிக்க வந்த இடத்தில், சந்தேகத்திற்கிடமான அவரது ஃப்ரீஸரைத் திறந்து பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். ஃப்ரீஸரில் உள்ளே பல்வேறு பிளாஸ்டிக் கவர்களில் மனித சடலத்தின் மிச்சங்கள் துண்டு, துண்டாக பாதுகாக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்தன. அந்த சடலம் யாருடையது என்று இன்னும் ஆதாரத்துடன் நிரூபணமாகவில்லை. ஆனால் அது நோவாவின் முன்னாள் காதலியின் உடல் பாகங்களாக இருக்கவும் சாத்தியமுண்டு எனும் வதந்தி அங்கு நிலவுகிறது. அப்படி இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக வீட்டு உரிமையாளர் உட்பட சிலர் காவல்துறையிடம் வாய்மொழி வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் நோவா மற்றும் அவரது தற்போதைய காதலி காத்ரினா லாய்டன் இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. 

வீட்டு உரிமையாளரின் வலுவான சந்தேகத்துக்கு காரணம், சந்தேகத்துக்கிடமான அந்த ஃப்ரீஸரை வாங்கியது நோவாவின் இப்போதைய காதலியான காத்ரினா லாய்டன் தான் என லாய்டனே ஒப்புக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல, கடந்த மாதம் வரை நோவாவுடன் இருந்த ஒரு பெண் திடீரென மாயமான அடுத்த சில நாட்களில் அந்த வீட்டுக்கு குடி வந்த காத்ரினா லாய்டன், கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் காணாமல் போன அந்தப்பெண் பயன்படுத்திய அவரது கார் மற்றும் பொருட்களை உடனடியாக தன்னுடையதைப் போல பாவித்துக் கொண்டு பயன்படுத்தத் தொடங்கி விட்டார். பொருட்கள் மட்டுமல்ல ஷனான் கிரெவ்ஸின் நாயைக் கூட காத்ரினா தனதாக்கிக் கொண்டார். இந்தச் செயல்கள் மற்றும் ஃப்ரீஸரில் இருக்கும் சடலத்தின் பாகங்கள் எல்லாம் சேர்ந்து நோவாவையும், காத்ரின் லாய்டனையும் இந்த வழக்கில் வகையாகச் சிக்க வைத்துள்ளது.

வழக்கு குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஃப்ரீஸரில் இருப்பது ஷனான் கிரேவ்ஸின் உடல் பாகங்கள் தானா? அல்லது இதில் வேறு மர்மங்களும் உறைந்திருக்கின்றனவா? என்பது விழக்கு விசாரணை முடிந்ததும் தெரிய வரும். ஒருவேளை ஃப்ரீஸரில் இருப்பது ஷனான் கிரேவ்ஸின் சடலம் இல்லையெனில் காணாமல் போன முன்னாள் காதலி என்னவானார்? என்பதைச் சொல்லும் நிர்பந்தமும் இப்போது நோவாவுக்கு இருக்கிறது.

Image courtesy: NDTV

Related Article

அலுவலகத்துக்குள் வந்த பாம்பு! அதிர்ச்சியடையாத பெண்

கேரளாவில் சிறையில் அடைக்கப்பட்ட 4 வயது சீனக்குழந்தை?

வகுப்பறையில் குறட்டைவிட்டுத் தூங்கிய ஆசிரியரைப் புகைப்படமாக்கி வாட்ஸ்- அப்பில் DEO க்கு அனுப்பிய மாணவன் மீது தாக்குதல்!

அட! பிறந்து நான்கே மாதத்தில் பேசத் தொடங்கி விட்டதாம் இந்த மைசூர் குழந்தை!

மதம் என்ற சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும்? மறைந்த பத்திரிகையாளர் ‘சோ’ வின் விளக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.