அட! பிறந்து நான்கே மாதத்தில் பேசத் தொடங்கி விட்டதாம் இந்த மைசூர் குழந்தை!

இந்தப் புகைப்படத்திலிருக்கும் குழந்தை மைசூரில் இருக்கிறது. பிறந்து 4 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் தன் அம்மாவுடன் பேசத் தொடங்கி விட்டது.
அட! பிறந்து நான்கே மாதத்தில் பேசத் தொடங்கி விட்டதாம் இந்த மைசூர் குழந்தை!

இந்தப் புகைப்படத்திலிருக்கும் குழந்தை மைசூரில் இருக்கிறது. பிறந்து 4 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் தன் அம்மாவுடன் பேசத் தொடங்கி விட்டது. பொதுவாக குழந்தைகள் பேசத்தொடங்குவது 10 மாத வாக்கில் தான். 4 மாதம் என்பது நம்மைப் பொறுத்தவரை அது கைக்குழந்தைப் பருவம். 3 மாதத்தில் தான் குழந்தை குப்புறக் கவிழும், அதன் பிறகு 6 மாதத்தில் தான் திட உணவுகளை சாப்பிடப் பழக்குவார்கள். 4 ஆம் மாதத்தின் பிற்பகுதியில் தான் மெல்ல, மெல்ல தவழத் தொடங்கும். இவையெல்லாம் நாம் கைக்குழந்தைகளிடம் காணக்கூடிய பொதுவான அம்சங்கள். ஆனால் இந்த மைசூர் குழந்தை முற்றிலும் வித்யாசமான வகையில் தன் அம்மாவுடன் இப்போதே பேசவே ஆரம்பித்து விட்டது. குழந்தையின் அம்மா, அதனிடம் பலமுறை என்னென்ன வார்த்தைகளை எல்லாம் பேசுகிறாரோ அவற்றையெல்லாம் அப்படியே பிடித்து வைத்துக் கொண்டு அதைக் குழந்தை தன் மழலையில் எதிரொலிக்கத் தொடங்கியதைக் கண்டு குழந்தையின் பெற்றோரும், உறவினரும் மிகுந்த மகழ்ச்சியில் இருக்கிறார்கள். 

குழந்தையின் பெற்றோரது பெயர் ரம்யா மற்றும் நந்தீஷ். ரம்யாவை வீட்டில் ‘புத்கி’ என்று அழைப்பார்களாம். தன் தாயை வீட்டினர் அந்தப் பெயரில் அழைப்பதை பலமுறை கேட்க நேர்ந்ததில் இப்போது குழந்தையும் தன் தாயை ‘புத்கி’ என்று அழைக்கத் தொடங்கி விட்டது. அது மட்டுமல்ல தற்போது இந்த 4 மாதக் குழந்தை அம்மா, ரம்யா, அக்கா, நானு, கொத்தில்லா, எனப்பல வார்த்தைகளையும் இப்போதே பேசத்தொடங்கி விட்டது. இது அந்தக் குடும்பத்தினரை மிகப்பெரிய ஆச்சர்யத்தில் தள்ளி இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com