பிடிக்காத கணவருக்கு மட்டுமல்ல அவரது மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து விஷம் வைத்துக் கொன்ற விபரீதப் பெண்!

பிடிக்காத கணவருக்கு மட்டுமல்ல அவரது மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து விஷம் வைத்துக் கொன்ற விபரீதப் பெண்!

எல்லாம் நம் தமிழ் சினிமாக்களிலும், தொலைக்காட்சி மெகா சீரியல்களிலும் முன்னரே பல முறை நாம் கண்ட காட்சி தான் இன்று பாகிஸ்தானில் நிஜமாகி இருக்கிறது

எல்லாம் நம் தமிழ் சினிமாக்களிலும், தொலைக்காட்சி மெகா சீரியல்களிலும் முன்னரே பல முறை நாம் கண்ட காட்சி தான் இன்று பாகிஸ்தானில் நிஜமாகி இருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் பஞ்சாம் மாநிலத்தைப் போலவே பாகிஸ்தானிலும் ஒரு பஞ்சாப் மாகாணம் உண்டு. அங்கு முசாஃபர்கர் நகரில் வசிப்பவர் அம்ஜத், இவரது மனைவி ஆசியா பேகம். ஆசியா பேகத்துக்கு அம்ஜத்தை திருமணம் செய்து கொள்ள இஷ்டமில்லாமல் இருந்து வந்த நிலையில் வீட்டினர் வற்புறுத்தி ஆசியாவை அம்ஜத்துக்கு நிக்ஹா செய்து வைத்திருந்தனர். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி முட்டலும், மோதலுமாகவே இருந்திருக்கிறது.

இந்நிலையில் நிக்ஹா முடிந்து சில தினங்களே ஆன நிலையில் சமீபத்தில் கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குத் திரும்பிய ஆசியா பேகத்தை அவரது தாய்வீட்டினர் சமாதானப்படுத்த முயற்சித்து முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் வற்புறுத்தி கட்டாயப்படுத்தி மீண்டும் அம்ஜத் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர். இதனால் தனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மீண்டும், மீண்டும் கணவன் வீட்டில் தன்னைத் தள்ளி விடப் பார்க்கும் தன் பிறந்த வீட்டார் மீதும் ஆசியா பேகத்துக்கு மனம் நிறைந்த வருத்தங்கள் இருந்து வந்தன. அதோடு புகுந்த வீட்டிலும் கணவரால் ஏற்பட்ட தொல்லைகள் அதிகரிக்கவே ஆசியா பேகம் தன் கணவர் அம்ஜத் அருந்தும் பாலில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார்.

என்ன காரணத்தாலோ ஆசியா அளித்த பாலை அம்ஜத் அருந்தாமல் தவிர்த்து விட பாலை வீணாக்க மனமில்லாமல் அதை வைத்து லஸ்ஸி செய்து வீட்டிலிருந்த அத்தனை பேரும் அருந்தியிருக்கிறார்கள். முன்னரே ஆசியா பேகம் அந்தப் பாலில் விஷம் கலந்திருந்த காரணத்தால் லஸ்ஸி அருந்திய அத்தனை பேரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி 13 பேர் விஷத்தால் மரணமடைந்தனர் மீதமுள்ள 28 பேரும் கூட விஷத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்கிறது அந்நாட்டு ஊடகச் செய்திகள்.

விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தி செய்து வைக்கப்பட்ட நிக்ஹாவின் பலன்  மணவாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்க வேண்டிய நேரத்தில் ஆசியா பேகம் தனது தவறான முடிவுகளால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த கூட்டுக் கொலையில் ஆசியாவுக்கு எவரேனும் உதவியிருக்கக் கூடுமா? அவர் ஆணாக இருந்தால் அவர் தான் இந்தக் கொலைகளின் மாஸ்டர் பிரெய்னாக இருக்கக் கூடுமா? என்ற ரீதியில் இந்த வழக்கின் விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com