ராகுல் காந்தியும், அமித் ஷாவும் நேருக்கு நேர் பார்த்தப்போ ஒரு ‘ஹாய்’ கூட சொல்லிக்கலை! இதான் அரசியல் நாகரீகம்!

இருவருமே மிக நீண்ட கால அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கு அரசியல் நாகரீகத்தைப் பற்றிச் சொல்லித்தர தேவையில்லை. ஆனால், இந்தியாவின் பிரதான இரு தேசியக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் இருக்க
ராகுல் காந்தியும், அமித் ஷாவும் நேருக்கு நேர் பார்த்தப்போ ஒரு ‘ஹாய்’ கூட சொல்லிக்கலை! இதான் அரசியல் நாகரீகம்!

இந்திய அரசியலைப் பொறுத்தவரை வட இந்திய அரசியல்வாதிகள், தென்னிந்திய அரசியல்வாதிகளை விட அரசியல் நாகரீகம் மிக்கவர்கள் என்று பல சமயங்களில் மீடியாக்களால் புகழப்படுவார்கள். காரணம் பாராளுமன்றத்தின் உள்ளேயோ அல்லது சட்டமன்றத்தின் உள்ளேயே அவர்களுக்குள் அரசியல் ரீதியாக ஆயிரம் தர்க்கங்களும், காரசாரமான விவாதங்களும் நடக்கும். கட்டிப் புரண்டு மல்லுக்கட்டாத குறையாக மோதிக் கொள்வார்கள். ஆனால், மக்கள் நிறைந்த சபை, பொது வெளி, விழாக்களில் ஒன்றாகப் பங்கேற்கும் சந்தர்பங்கள் அமையும் போதெல்லாம் குடும்ப நண்பர்களைப் போல நலம் விசாரிக்கத் தயங்க மாட்டார்கள். குறைந்த பட்சம் எப்பேர்ப்பட்ட அரசியல் எதிரிகள் என்றாலும் ஒரு புன்னகையாவது பரிமாறிக் கொள்வார்கள் என்று தான் இதுவரை நற்பெயர் எடுத்திருந்தார்கள்.

ஆனால், இன்று காலை பாராளுமன்றத்தின் 4 ஆம் எண் நுழைவாயில் வழியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியேறிக் கொண்டிருக்கையில் சொல்லி வைத்தாற் போல பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா உள்ளே எண்ட்ரி ஆனார். இருவரும் வெகு நெருக்கமாக, எதிரும், புதிருமாய் வாசலைக் கடக்க நேர்கையில் இருவரது முகத்திலும் புன்னகை இருந்ததென்னவோ வாஸ்தவமே, ஆனால் அது இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டது அல்ல. அங்கே குழுமியிருந்த அவரவர் கட்சியினருக்கானது.

இருவருமே மிக நீண்ட கால அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கு அரசியல் நாகரீகத்தைப் பற்றிச் சொல்லித்தர தேவையில்லை. ஆனால், இந்தியாவின் பிரதான இரு தேசியக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் இப்படி பொதுமக்கள் உலவும் இடங்களில் குறைந்த பட்ச அரசியல் நாகரீகத்தைக் கூட கிடப்பில் போட்டு ஒரு  ‘ஹாய்’ கூட சொல்லிக் கொள்ளாது, முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றது ரசிக்கும்படியாக இல்லை.

இப்படி இருக்கும் வட இந்திய அரசியல்வாதிகளுக்கு இனி அதிமுக, திமுக போன்ற தமிழக அரசியல்வாதிகளின் அரசியல் நாகரீகம் பற்றிப் பேச எந்த தகுதியுமிருப்பதாகத் தெரியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com