பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

இன்னும் கொஞ்ச நாள் லீவு வேணும் மக்களே! சிகிச்சை விஷயத்தில் கோவா முதல்வரின் வெளிப்படையான அணுகுமுறை!

கணைய நோயால் அவதிப்பட்டு வரும் எனக்கு முற்றிலும் நோய் குணமாக மேலும் சில நாட்கள் தேவைப்படலாம். அதனால் நான் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன்.

News image
Updated On :6 மார்ச் 2018, 10:10 am IST

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஃபிப்ரவரி 15 முதல் 22 வரை அங்கே சிகிச்சை பெற்று வந்த அவர் 22 ஆம் தேதி கோவா சட்டமன்றக் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கோவா வந்திருந்தார். அப்போது பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் கோவா மக்களுக்காக அவர் சிறு உரையும் நிகழ்த்தினார். அப்போது, பட்ஜெட் தாக்கலுக்காக சட்டமன்றத்துக்குத் திரும்பினாலும் மனோகர் பாரிக்கருக்கான சிகிச்சைகள் மீண்டும் தொடரவிருப்பதால் அவருக்கு விடுமுறை தேவைப்படுகிறது என அவரே தனக்கு வாக்களித்த மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

நேற்று, செய்தியாளர்களிடையே பேசிய மனோகர் பாரிக்கர், எனக்கு வாக்களித்த கோவா மக்களுக்கு நன்றி,  நான் முற்றிலும் குணமடைய மேலும் சில சிகிச்சைகளுக்கு நான் உட்பட வேண்டியதாக இருக்கிறது. அதற்காக தொடர்ந்து மும்பைக்குப் பயணப்பட வேண்டிய தேவை இருப்பதாலும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஒருவேளை வெளிநாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய சூழல் வந்தால் அதற்காகவும் சேர்த்து எனக்கு மேலும் சில நாட்கள் விடுமுறை தேவைப்படுகிறது. கடந்த 15 நாட்களாக நான் நலம் பெற வேண்டும் எனப் பிரார்த்தித்த கோவா மக்களுக்கு மிக்க நன்றி. அவர்களது பிரார்த்தனையின் பலனால் தான் நான் இன்று உங்கள் முன் நலம் பெற்றுத் திரும்பியிருக்கிறேன். கணைய நோயால் அவதிப்பட்டு வரும் எனக்கு முற்றிலும் நோய் குணமாக மேலும் சில நாட்கள் தேவைப்படலாம். அதனால் நான் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன். எனக்கு வாக்களித்த கோவா மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

இங்கே நமது தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா எனும் இரும்புப் பெண்மணிக்கும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அப்போது நிகழ்ந்த அரசியல் கூத்துக்களோடு ஒப்பிடுகையில் கோவா முதல்வரின் இந்த வெளிப்படையான அணுகுமுறை நிச்சயமாகப் பாராட்டத்தக்கது. மாநில முதல்வர்களின் உடல்நலக் குறைபாடு மற்றும் சிகிச்சை பற்றிய வெளிப்படையான அறிவிப்புகளும் அப்படியொன்றும் ரகசியம் காக்கப்பட வேண்டியவை அல்ல. அவர்களை நம்பி வாக்களித்த நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளத் தக்க விஷயங்களே என்ற புரிந்துணர்வுடன் மக்களுக்குத் தனது சிகிச்சை விவரங்களைத் தெரிவித்து முறையான அறிவிப்புடன் விடுமுறை பெற விரும்பும் இந்த முதல்வர் இவ்விஷயத்தில் பிற மாநில முதல்வர்களுக்கு சிறந்த முன்னுதாரணமே!

Related Article

ஃபிடல் காஸ்ட்ரோ, பிரபாகரன் குறித்துக் கருத்துக் கூறி ஈழத்தமிழர்களைக் கொந்தளிக்கச் செய்த பிரபல மனநல மருத்துவர்!

சுப்ரமண்யபுரம் ஸ்டைலில் காதலித்த பெண்ணையே பகடைக்காயாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்!

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் இன்றைய நிலை?!

எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனையின் போது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை எவை?

'செய்திகளுக்கு வண்ணம் பூச வேண்டாம்' ஊடகங்கள் மீதான அதிருப்தி குறித்து வெங்கய்ய நாயுடு முன்வைத்த வேண்டுகோளின் மீதான விமர்சனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.