சுடச்சுட

  

  பத்மா சேஷாத்ரி கல்விக் குழுமத் தலைவர் ராஜலட்சுமி பார்த்தசாரதி மறைவு!

  By RKV  |   Published on : 06th August 2019 04:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mrs_y_g_mahendra

   

  பத்மா சேஷாத்ரி கல்விக் குழுமங்களை உருவாக்கியவரும் அதன் தாளாளருமான திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 93.

  வயோதிகத்தாலான உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜலட்சுமி பார்த்தசாரதி மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்று மரணமடைந்தார் என அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

  சென்னையின் பிரபலமான பத்மா சேஷாத்ரி கல்விக் குழுமங்களை உருவாக்கியவரான ராஜலட்சுமி பார்த்தசாரதி கல்வியாளர் மட்டுமல்ல பத்ரிகையாளராகவும், தியேட்டர் கலைஞராகவும் குறிப்பிடத் தக்க ஆக்கங்களைத் தந்தவர் என்பது இவ்வேளையில் நினைவுகூரத் தக்கது.

  பிரபல நடிகர் ஒய் ஜி மஹேந்திரனின் தாயாரான இவருக்கு ஒய் ஜி ராஜேந்திரன்என்ற பெயரில் மற்றொரு மகனும் உண்டு. 

  மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகளுடன் நிறைவாக வாழ்ந்தவரான ராஜலட்சுமி பார்த்தசாரதியின் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக தி நகர், திருமலைப்பிள்ளை தெருவில் இருக்கும் பத்மா சேஷாத்ரி பள்ளியில் வைக்கப்படவிருக்கிறது.

  அவரது இறுதிச் சடங்கு நாளை மாலை 4 மணி அளவில் பெசண்ட் நகர்மின்  மயானத்தில் நடைபெறும் என்று தகவல். 


  Image courtesy: Alchetron

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai