'தாராள மனப்பான்மை கொண்டவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள்'
தாராள மனப்பான்மை உடையவர்கள் அல்லது அதிகமானவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புவோருக்கு ஆயுள் காலம் அதிகமாக இருக்கும் என்று ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது.


தாராள மனப்பான்மை உடையவர்கள் அல்லது வருமானத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புவோருக்கு ஆயுள் காலம் அதிகமாக இருக்கும் என்று ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது.
ஃபென்னி க்ளூக் மற்றும் டோபியாஸ் வோக்ட் ஆகியோர் ஒரு சமூகத்தின் தாராள மனப்பான்மைக்கும், சமூகத்தில் உள்ளவர்களின் சராசரி ஆயுள் காலத்துக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
ஜெர்மனியின் ரோஸ்டாக்கில் உள்ள 'மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் டெமோகிராஃபிக் ரிசர்ச்' என்ற அமைப்பின் ஆய்வாளர்கள், 'குறிப்பிட்ட சமுதாயத்தில் மக்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் அனைத்து விதத்திலும் ஆதரவாக இருக்கின்றனர்' என்கிறார்கள்.
ஒரு நாட்டின் இறப்பு விகிதத்துக்கும், ஒருவரது வருமானப் பகிர்வையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் தேசியப் பரிமாற்ற கணக்குகள் (National Transfer Accounts) திட்டத்திலிருந்து 34 நாடுகளுக்கான தரவுகள் பயன்படுத்தப்பட்டன.
செனகல் போன்ற சப்-சஹாரா ஆப்பிரிக்க நாடுகள் மக்கள் தங்கள் வருமானத்தில் மிகக் குறைந்த அளவே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர். அங்குள்ள மக்களின் ஆயுள்காலம் குறைவாக உள்ளது. அவர்கள் பெருந்தன்மை அற்றவர்களாக இருந்தனர். அதேபோன்று தென் ஆப்பிரிக்காவில் 20 வயது வரை உள்ளவர்களின் இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதேநேரத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் அதிக மாற்றங்கள் இருந்தன. இங்கு இறப்பு விகிதங்கள் குறைவாக உள்ளன. தென் அமெரிக்காவில் மக்கள் தங்கள் சராசரி வருமானத்தில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தென் அமெரிக்காவில் இறப்பு விகிதம் சப்- சஹாரா நாடுகளை விட குறைவாகவும், அதேநேரத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், மேற்கு ஐரோப்பா நாடுகளை விட அதிகமாகவும் உள்ளன.
தரவுகளில் பிரான்ஸ் மற்றும் ஜப்பானில் இறப்பு விகிதம் குறைவாகவும் மக்களின் ஆயுள் காலம் அதிகமாகவும் இருந்தன. இந்நாட்டவர்கள் தங்கள் வருமானத்தில் 68 முதல் 69 சதவிகிதம் வரை மற்றவர்களுடன் பகிர்கின்றனர். ஆனால், இந்த நாடுகளிலும் வரவிருக்கும் காலங்களில் பகிர்தல் குறையும் என்று கூறப்படுகிறது.
வரும் ஆண்டுகளில் வருமானப் பகிர்வு என்பது 44 முதல் 48 சதவிகிதம் வரை குறைந்து சீனா, துருக்கியைப் போல ஜப்பான், பிரான்ஸிலும் இறப்பு விகிதம் மாறும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தாராள குணம் போன்று வேறு காரணிகளையும் வைத்து மக்களின் ஆயுள் காலம் கணக்கிடப்படுவது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்வோம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...