ஊர்க்காவல் படையினர் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்களா?

ஊர்க்காவல் படையினர் கரோனா பொது முடக்க காலத்தில் முக்கிய பங்கு வகித்ததால், முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை
ஊர்க்காவல் படையினர் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்களா?
ஊர்க்காவல் படையினர் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்களா?

கம்பம்: தமிழக காவல்துறையுடன் இணைந்து பணியாற்றும், ஊர்க்காவல் படையினர் கரோனா பொது முடக்க காலத்தில் முக்கிய பங்கு வகித்ததால், முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் தமிழக காவல் துறையுடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றி வருகின்றனர். போக்குவரத்து, கோயில் திருவிழாக்கள், முக்கிய தலைவர்கள் வருகை, தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

காக்கி உடை அணிந்து, பல்வேறு உயரம், உடல் அளவுகளில் இருந்தாலும், பார்க்கும் பொதுமக்களுக்கு காமெடி போல் காட்சியளித்தாலும் இவர்கள் பணி தற்போதுதான் முக்கியத்துவம் பெற்றது.

கரோனாவால் உயர்ந்தவர்கள்:

உலகை ஆட்டிப்படைத்த கரோனா தீ நுண்மி தொற்று இரண்டாம் அலையாக உருவெடுத்து, பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்று பரவாமல் முக்கிய பங்கு வகிக்கும் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றிய போலீஸ் நண்பர்கள் குழு சாத்தான்குளம் சம்பவத்தால் களைக்கப்பட்டது. ஆனால் ஊர்க்காவல் படையினர் எந்த வித புகார்களில் சிக்காமல் இன்று வரை பணியாற்றினர்.

இரண்டாம் கரோனா பரவல் பொதுமுடக்கத்தில் ஊர் மற்றும் தெரு எல்லைகள் அடைக்கப்பட்டபோதும், வாகன தணிக்கை, இ பதிவு, இ அனுமதி போன்றவைகளை தணிக்கை செய்து பயணிகளை அனுப்பி வந்ததில். காவலர்கள் பணி போன்று, அவர்களுக்கு இணையாக பணியில் ஈடுபட்டனர். 

குறைந்த ஊதியம்:

ஊர்க்காவல் படையினர் காவலர் பணி போன்றே உயரம், உடல் தகுதி போன்றவைகள் மூலம், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம்  தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி பெற்று, பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

மாதத்தில் 7 நாள் மட்டுமே பணி, 8 மணி நேர வேலை, 560 ரூபாய் ஊதியம் என்ற அளவில் பணியாற்றும் ஊர்க்காவல் படையினர், கரோனா பொதுமுடக்க காலத்தில் இரவு பகல் என அனைத்து நேரங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

தொற்று பரவல் உள்ள கட்டுப்பாட்டு இடங்களுக்கு சென்று பாதுகாப்பு பணியில் அச்சப்படாமல் பணியாற்றி வருகின்றனர்.

முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்:

கரோனா தொற்று பரவல் இரண்டாம் அலையில் பணியாற்றுவபவர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்த அரசு ஊர்க்காவல் படையினரையும் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மாதத்தில் 7 நாட்கள் பணி என்பதை 30 நாட்கள் பணிக்காலமாக வழங்கினால் வாழ்வாதாரம் வளம் பெறும் என்றும் எதிர்பார்க்கின்றனர். புதியதாக பொறுப்பேற்ற அரசு, ஊர் காவல் படையினரின் கோரிக்கையை  நிறைவேற்றுமா என்றும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com