கரோனாவுக்குப் பிறகு மறதி அதிகமாக இருக்கிறதா?
By PTI | Published On : 07th December 2022 11:33 AM | Last Updated : 07th December 2022 04:46 PM | அ+அ அ- |

கரோனாவுக்குப் பிறகு மறதி அதிகமாக இருக்கிறதா?
கரோனா வைரஸ் சுவாச மண்டலங்களை வெகுவாகப் பாதித்தது என்பது பரவலாகவே அறியப்பட்ட தகவல்தான் ஆனால், அது மனிதனின் அறிவாற்றல் செயல்பாட்டையும் பாதித்துள்ளது என்பது பலரும் அறியாத தகவலாகவே உள்ளது.
கரோனா பாதித்த பலருக்கும் மூளையின் செயல்பாட்டில் ஒரு மந்தம் அல்லது சுணக்க நிலை இருப்பது தொடர்ந்து பதிவாகி வருகிறது. அதாவது, ஒரு தகவலை நினைவில் வைப்பது, ஒரு செயல்பாட்டில் கவனம் செலுத்துவது, தினந்தோறும் செய்யும் வேலைகளை நினைவூட்டுதல் போன்றவற்றில் சிக்கல்கள் இருந்தது பல தரப்பிலிருந்தும் கூறப்பட்டு வரும் புகார்தான்.
இதையும் படிக்க.. நாடகம் பார்த்த குற்றத்துக்காக 2 சிறார்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
நீண்ட அல்லது கடுமையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெய்ன் ஃபோக் எனப்படும் மூளை மந்த நிலை காணப்படுகிறது. ஒரு சிலருக்கு மாதக்கணக்கிலும் சிலருக்கு வருடக் கணக்கிலும் இந்த பாதிப்பு உள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், கரோனா வைரஸ் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் 25 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினருக்குத்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதே ஆய்வில், காலப்போக்கில் நிச்சயம் இந்த குறைபாடு சரிசெய்யப்படும் என்றாலும், அறிவாற்றல் செயல்பாட்டில் முழுமையாக இந்த பாதிப்பு மேம்படுமா? என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறுகிய கால நினைவாற்றல் எனப்படும் செயல்பாட்டுத் திறனானது, அவ்வப்போது நடக்கும் செயல்பாடுகளை நினைவில் வைத்துக் கொள்வது, ஒரு பிரச்னை வரும் போது அதனை எவ்வாறு சரி செய்வது என்ற யோசனையை தருவது, படிப்பது, பேசுவது அல்லது விவாதம் செய்யும் போது உடனுக்குடன் செயல்படுவது போன்றவற்றை உள்ளடக்கியது.
இதையும் படிக்க.. எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? ரிவார்டு புள்ளிகளிலும் வருகிறது மாற்றம்
எனவே பலவீனமான நினைவாற்றல் செயல்பாடு ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்தவர்கள் கூட, நீண்ட அல்லது தீவிர கரோனா பாதிப்புக்குப் பிறகு அந்த திறனை இழந்துவிட்டதாகவே உணர்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
பல்வேறு வகையில் மனிதர்களை பரிசோதித்து, அவர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு, இந்த ஆய்வு மேறகொள்ளப்பட்டுள்ளது. கரோனாவுக்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகள், பொதுவான கேள்வி பதில்கள் என இதில் பல சோதனைகள் அடங்கியிருந்தன. இதில் 5,400 பேர் பங்கேற்றனர்.
பிரிட்டனில், ஹல் பல்கலைக்கழகம், யோர்க் ஹல் பல்கலைக்கழகம் இணைந்து இந்த ஆய்வினை நடத்தியிருக்கிறது.