சீனக் கடனைச் செலுத்த சீனாவிடமே 100 கோடி டாலர் கடன் வாங்கும் இலங்கை

பெரும் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள இலங்கை அரசு, கடனை அடைக்கக் கடன் வாங்குகிறது, மீண்டும் சீனாவிடமே.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் கடும் தட்டுப்பாடு காரணமாக டீசலுக்காக வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில் காவல் பணியில் ராணுவம்
இலங்கைத் தலைநகர் கொழும்பில் கடும் தட்டுப்பாடு காரணமாக டீசலுக்காக வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில் காவல் பணியில் ராணுவம்

பெரும் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள இலங்கை அரசு, சீனாவின் கடனை அடைப்பதற்காக சீனாவிடமே மீண்டும் கடன் வாங்குகிறது.

சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் (நூறு கோடி) அமெரிக்க டாலர் கடனைப் பெறத் திட்டமிட்டுள்ள இலங்கை, இந்தத் தொகையை ஏற்கெனவே சீன வங்கிகளிடம் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தவுள்ளதாகத் தகவறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

(ஒரு பில்லியன் டாலர் - நூறு கோடி டாலர், நடப்பு இந்திய மதிப்பில் 7,628 கோடி ரூபாய், இலங்கை மதிப்பில் 29,017 கோடி ரூபாய்).

சீனாவிடமிருந்து இலங்கை பெற்றுள்ள வங்கிக் கடன்களும் இதேயளவு  இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடன்களைத்  திருப்பியளிப்பதற்கான  தவணைகளை மாற்றியமைக்கும் திட்டங்கள் எதுவும் சீன நடைமுறைகளில் இல்லாததால் மறுகடன்கள் வாங்கப்படுவதாகத் தெரிகிறது.

புதிய கடன்களை வழங்குவது தொடர்பான விதிகள் - நிபந்தனைகள் பற்றி இரு நாடுகளின் உயர் அலுவலர்களும் பேசி வருகின்றனர்.

இதனிடையே,  சீனாவிடமிருந்து (சகலவிதமான) பொருள்களை இறக்குமதி  செய்வதற்காக சீனாவிடமே 1.5 பில்லியன் (150 கோடி)  டாலர் அளவுக்கு  வர்த்தகக் கடன் வசதியைப் பெறவும் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க.. இலங்கை செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com