இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்னும் சில நாள்களில் இலங்கை செல்லவிருக்கிறார்.
இந்தத் தகவல்களை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. எரியும் இலங்கை: மகிந்த ராஜபட்ச அரசின் வீழ்ச்சி; நேரடி ரிப்போர்ட்-3
இலங்கை மட்டுமின்றி மாலத்தீவுகளுக்கும் செல்லும் ஜெய்சங்கர், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதுடன், பல்வேறு உடன்பாடுகளிலும் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் அழைப்பின் பேரில் வாரக் கடைசியில் மாலத்தீவிலுள்ள அட்டுவிற்குச் செல்கிறார் ஜெய்சங்கர்.
இதையும் படிக்க.. எரியும் இலங்கை: என்ன நடக்கிறது? நேரடி ரிப்போர்ட் - 1
பின்னர் இலங்கை வந்து, மார்ச் 28 முதல் 30 ஆம் தேதி வரை தங்கியிருக்கும் ஜெய்சங்கர், பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதுடன், செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப - பொருளாதார ஒத்துழைப்பு முனைப்புக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
உணவுப் பொருள்களில் தொடங்கி, எரிபொருள், காகிதம் எல்லாவகையான பற்றாக்குறைகளாலும் மக்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமான நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் அமைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நான்தான் கிங் பாடல்!

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி!

ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 230 ரன்கள் இலக்கு!
தமிழக முதல்வருடன் வருங்கால பிரதமர்! கிரிஷ் சோடங்கர் பதிவு வைரல்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

