புதிய விமான நிலையம் அமைக்க சென்னைக்கு அருகேயுள்ள திருப்போரூர், படாளம், பன்னூர், தாம்பரம் உள்பட மொத்தம் 11 இடங்கள் ஆய்வு செய்ப்பட்டதில் இறுதியாக பரந்தூரில் அமைப்பதே தொழில்நுட்ப ரீதியாக சரியானது என்ற முடிவுக்கு அரசு வந்தது. புதிய விமான நிலையத்தை அமைக்க சுமார் 4,500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பரந்தூர், வளத்தூர், மடப்புரம், நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம், அக்கம்மாபுரம் உட்பட மொத்தம் 13 கிராமங்களிலிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும்.
பட்டா நிலங்கள் 2,500 ஏக்கரும், அரசு புறம்போக்கு நிலம் 2,200 ஏக்கர் உள்பட மொத்தம் 4,700 ஏக்கர் புதிய விமான நிலையம் அமைக்க இடம் தேவைப்படுகிறது. ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டீல் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கும் விமான நிலைய எல்லையை இறுதி செய்வதற்கும் நிர்வாக அனுமதியை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஓரிரு வாரங்களில் அனுமதியளிக்கவும் உள்ளது.