காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலை அருகே லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் கிராமம் அருகே இன்று நள்ளிரவு 1 மணி அளவில் லாரி-கார் நேருக்கு நேர் மோதியதில்  காரில் பயணம் செய்த  3 ஆண், 3 பெண் , ஒரு சிறுமி உட்பட மொத்தம் 7 பேர் சம்பவ இடத்தில்

News image
Updated On :9 டிசம்பர் 2016, 12:12 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் கிராமம் அருகே இன்று நள்ளிரவு 1 மணி அளவில் லாரி-கார் நேருக்கு நேர் மோதியதில்  காரில் பயணம் செய்த  3 ஆண், 3 பெண் , ஒரு சிறுமி உட்பட மொத்தம் 7 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
விழுப்புரம் மாவட்டம் இலவனாசூர் கோட்டை ஏமம் கிராமத்தை சார்ந்த 10 பேர்  இரவு திருப்பதிக்கு சென்றனர். இவர்கள் பயணம் செய்த கார் திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓசூரிலிரிந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக திருவன்ணாமலை அரசு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அறிந்த திருவன்ணாமலை மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டு வருகிறார். இந்த விபத்து குறித்து திருவன்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக தெரிகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.