வர்தா புயலின் சீற்றத்தால் சென்னை மக்களுக்கு நேற்றைய தினம் (12.12.2016) மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது. வர்தா புயலின் கடுமையான பாதிப்பை முழுமையாக உணர்ந்த மக்கள் அச்சத்துடன் தான் உறங்கச் சென்றார்கள். காலையில் விழித்தவர்கள் கண்டதெல்லாம் கோரக் காட்சி. புயலால் சீர் குலைந்திருந்தது சிங்காரச் சென்னை.
சென்னையின் பசுமைக்கு காரணமாக இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து வீதிகளில் விழுந்து கிடந்தன. வானுயர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் பெரிய கிளைகள் சாலைகளில் குறுக்கே சாய்ந்திருந்தன. இவை தவிர விளம்பர போர்ட்டுகள், உடைந்த சுவர்கள், வண்டிகள் என ஒவ்வொரு தெருக்களிலும் வெவ்வேறு பாதிப்புக்கள். மக்கள் சோகத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது மின்சாரம் மற்றும் பால் இல்லாத நிலை. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். இன்றும் (13.12.2016) மின்சாரம் வராத நிலையில் தண்ணீர் பிரச்னையும் சேர்ந்து பெரும் அவதிக்குள்ளானார்கள். ஒரே நாளில் இயல்பான வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்ட வர்தா புயலின் தாக்கத்தால் செய்வதறியாது திகைத்துக் கிடக்கிறார்கள் சென்னைவாசிகள்.
இவர்கள் வந்து சீர் செய்வார்கள், அவர்கள் வருவார்கள் என்று காத்திருக்காமல், பொதுமக்கள் நேரடியாக களத்தில் இறங்கி, தங்கள் வீடுகளை, தாங்கள் வசிக்கும் தெருக்களை சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டது ஆச்சரியமான உண்மை. புயல் அடித்து வீழ்த்தப்பட்ட மரங்களை சாலைகளிலிருந்து அப்புறப்படுத்தினர் இளைஞர்கள். இடிந்த சுவர்கள், பேனர்கள் ஆகியவற்றையும் சீர் செய்தனர். இலைகள் தழைகளால் சூழப்பட்டிருந்த தெருக்களை பெறுக்கி சுத்தப்படுத்தினர்.
தன்னுடைய பகுதியில் ஏற்பட்ட பாதிப்புக்களைப் சுற்றிப் பார்த்த ஏ.விஸ்வநாதன் என்பவர் குறிப்பிடுகையில், ‘எங்கே திரும்பினாலும் ஒடிந்து விழுந்து கிடந்த மரங்களைப் பார்க்கையில் காட்டின் நடுவே இருப்பதைப் போல ஓர் உணர்வு ஏற்படுகிறது’ என்றார்.
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் கிட்டத்தட்ட 400 மரங்கள் வீழ்ந்துள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஒவ்வொரு பகுதியிலும், வீடுகளிலும் வேரோடு விழுந்தும் கிளைகள் ஒடிந்தும் கிடக்கும் மரங்களின் எண்ணிக்கை அதைவிட மிக அதிகமாக இருக்கும் என்கின்றனர் மக்கள்.
பிரதான சாலைகளில் விழுந்திருந்த மரங்களை அரசு அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையில் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த சில நாட்களாகும். பேருந்து சேவைகள் தற்போது தொடங்கிவிட்டாலும், சில பகுதிகளில் பாதிப்புக்கள் அதிகம் இருப்பதால், மரங்களை அப்புறப்படுத்துவரை அந்தச் சாலைகளுள் பேருந்துகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை முழுவதும் கட்டுக்குள் வந்து சீர் அடைய சில நாட்கள் ஆகலாம், அதுவரை மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றனர் அதிகார்கள்.
முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடம் இந்தக் கடுமையான புயலிலும் எவ்வித பாதிப்புமின்றி நல்லபடியாக உள்ளது. தற்காப்பு நடவடிக்கையாக வெள்ள நீர் புகாமல் இருக்க நிறைய மணல் மூட்டைகளை வைத்திருந்தார்கள். இன்று அதிகாலை முதல், நினைவிடத்துக்கு பார்க்க மக்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளார்கள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடைகள், உணவகங்கள் இன்று திறக்கப்பட்டன. ஆனால் சில உணவகங்களில் கடன் அட்டைகள் அனுமதிக்கப்படவில்லை. மின்சாரம் இல்லாத நிலையில் டெபிட் / க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாததே காரணம் என்றனர்.
வர்தா புயலின் தாக்கத்தால் பல பாதிப்புக்கள் முழுவதும் சீர் செய்யப்பட்டிருக்காத நிலையில், மக்கள் அச்சத்திலிருந்து மெதுவாக வெளிவந்து, வேறு வழியின்றி பிழைப்பைப் பார்க்கக் கிளம்பிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர் என்பதே நிதர்சனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


