ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம்: மாரியப்பனுக்கு மு.க.ஸ்டாலின், அன்புமணி வாழ்த்து

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,

Updated On :10 செப்டம்பர் 2016, 11:44 am

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் (திமுக): பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியிருப்பதன் மூலம்  ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் பெறவில்லையே என்று ஏங்கிய எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களின் மனதைக் குளிர வைத்து  ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களுக்கும், நாட்டிற்கும் மகத்தான சிறப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.

மற்றொரு இந்திய வீரரான வருண்சிங்பாடி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார். இந்திய வீரர்கள் இருவர், ஒரே பிரிவில், இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய திருநாட்டிற்கு பாராலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் புதிய இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. 

பதக்கம் பெற்ற வீரர்களை பாராட்டும் இந்த நேரத்தில் அவர்களுக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை பாராட்டி ஊக்கம் அளித்தது போல் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுத்து விருதுகளும் வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அன்புமணி (பாமக): பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் இந்தியாவுக்கு மாரியப்பன் முதல் தங்கத்தை வென்றுள்ளார்.
 

இளம் வயதில் பள்ளிக்கு செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி வலது கால் நசுங்கி மாற்றுத் திறனாளி ஆனவர். ஆனாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் தீவிரப் பயிற்சி பெற்று பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்திருக்கிறார்.

இதேபோல் அதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற மற்றொரு இந்திய வீரர் வருண்சிங்பாடிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 
கடந்த மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பெரிய அளவில் சாதிக்க முடியாத நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டிகளின் ஒரே பிரிவில் மாற்றுத் திறனாளிகள் இரு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு மிகப் பெரிய பெருமை சேர்த்திருக்கின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.