இந்தியாவில் மத உணர்வைப் பற்றிய பெரும்பாலானோரின் கருத்துகள் எப்படி இருக்கின்றன? என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த நடிகரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவை பிறருக்கு பரிந்துரைக்கலாம். பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக். நம்ம ஊர் நாஸர், பிரகாஷ் ராஜ், சத்யராஜ் போல பாலிவுட்டில் சுதந்திரமாகச் கருத்துச் சொல்லத் தயங்காத நடிகர்களில் இவரும் ஒருவர். பாலிவுட்டின் சிறந்த நடிகர்களைக் கணக்கெடுத்தால் நிச்சயம் அதில் நவாஸுத்தீனும் இருப்பார். இப்போது அவர் புதிதாக என்ன செய்து விட்டார் என்கிறீர்களா?
எப்போதுமே மத்தியில் பாஜக ஆளும் போது மத விவகாரங்களில் ஆர் எஸ் எஸ் சின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்பது ஊரறிந்த செய்தி. மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படையாக முழங்கும் விசயத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர்களும், சீடர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல! வட மாநிலங்களில் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாக இப்படி நாளுக்கு நாள் சர்ச்சைக்குரிய கருத்துகள் வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் போது அவற்றை முறியடிக்கும் விதமாக பிரபலங்களிடம் இருந்து எதிர்வினைகள் வருவதுண்டு.
இப்படித் தான் கடந்த வாரத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்களில் வழிபாட்டு நேரத்தில் லவுட் ஸ்பீக்கர்கள் வைப்பது ஆன்மீகத்தை, மத உணர்வைத் திணிக்கும் செயல் எனக்கூறி பிரபல இந்திப் பாடகர் சோனு நிகம் கருத்து தெரிவித்திருந்தார். இதை எதிர்த்த இஸ்லாமிய மெளல்வி சோனுவின் தலையை மொட்டை அடிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்கள் பரிசு என அறிவித்தார். இதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்ட சோனு தனது தலையை தனது இஸ்லாமிய சிகை அலங்கார நண்பர் மூலம் மொட்டை அடித்துக் கொண்டு அதையும் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அவருக்கு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க ட்விட்டர் உதவியதைப் போல இப்போது நவாஸுத்தீனுக்கு தனது மத நிலைப்பாட்டைத் தெரிவிக்க இன்ஸ்டாகிராம் உதவி இருக்கிறது.
இந்த வீடியோவில் நவாஸுத்தீன் பேசவே இல்லை. அவர் அந்த வீடியோவில் தோன்றி தன் கையில் ஏந்திய பதாகைகள் மூலம் தெரிவிக்கும் கருத்து இது தான்;
நான் சமீபத்தில் தான் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்து கொள்ள டிஎன்ஏ சோதனை செய்து கொண்டேன். அந்த சோதனை முடிவு தெரிந்து விட்டது. அதன்படி நான் 16.66 % இந்து, 16.66 % முஸ்லீம், 16.66 % சீக்கியன், 16.66 % பெளத்தன், 16.66 % கிறிஸ்தவன், 16.66 % உலகில் உள்ள மற்ற எல்லா மதமும் கலந்தவன். ஆனால் கடைசியாக எனது ஆன்மா எதைச் சேர்ந்தது எனக் கணக்கிட்டதில் அது முற்றிலும் 100 % என்னை ஒரு கலைஞன் எனக் காட்டியது. இது தான் எனது டிஎன் ஏ சோதனை முடிவு. இது நவாஸுத்தீனின் டிஎன் ஏ சோதனை முடிவு மட்டுமல்ல. இந்தியாவில் வாழும் பெரும்பாலானோரின் டிஎன் ஏ சோதனை முடிவுகளும் இப்படியாகத் தான் இருக்கக் கூடும். ஏனெனில் அனைத்து மக்களுக்குமே மதம் ஒரு வெறியூட்டக் கூடிய உந்து சக்தியாக இருப்பதில்லை. என்பதால் நவாஸுத்தீன் இந்த வீடியோவை பகிர்ந்த உடனே அது பலரால் லைக் செய்யப்பட்டு உடனுக்குடன் அதிகளவில் பகிரப்பட்டு இணையத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.
இதோ அந்த வீடியோ...
Video courtsy: youtube.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு
தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தொடர்வது அரசியலமைப்பின் மீதான தாக்குதல்: காங்கிரஸ்

மாஸ்க் கொண்டாட்டம் பற்றி பேசிய சுழல்பந்து இரட்டையர்கள் அகீல் ஹொசைன், நூர் அகமது!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


