ஐஐடி கோச்சிங் செல்ல வற்புறுத்தியதால் 11 வயது மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

சில சமயங்களில் பெற்றோர்களின் பெருங்கனவுகளை பிள்ளைகளால் ஈடு செய்ய முடியாமலாகும் போது, அவர்கள் அந்தக் கனவுகளை தங்களது பிள்ளைகளின் உணர்வறிந்து மறுதலிக்கலாம். இல்லாத பட்சத்தில் இப்படித்தான் பிள்ளைகளை
ஐஐடி கோச்சிங் செல்ல வற்புறுத்தியதால் 11 வயது மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
Published on
Updated on
1 min read

தெலுங்கானா, கரீம் நகரைச் சேர்ந்த 11 வயது மாணவன் ஒருவன், தனது பெற்றோர் ஐஐடி கோச்சிங்கில் சேர தன்னைத் தொடர்ந்து வற்புறுத்தியதில் மனமுடைந்து தான் படித்த பள்ளியின் 2 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கரீம் நகர், சித்தார்த்தா உயர்நிலைப் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவனான குர்ரம் ஸ்ரீகர் ரெட்டி... தன் விருப்பத்தை மீறி, தனது பெற்றோர் தன்னை தொடர்ந்து வற்புறுத்தி ஐஐடி பயிற்சியில் சேர வற்புறுத்தி வந்ததால் மன உளைச்சல் தாங்காது வியாழனன்று காலையில் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறான். உயிரிழந்த ஸ்ரீகர் ரெட்டி தனது பெற்றோருக்கு ஒரே வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலையில், பள்ளி நேரத்தில் தனது சக மாணவர்களுடன் பள்ளியின் 2 வது மாடிக்குச் சென்ற ஸ்ரீகர் ரெட்டி, திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி மாடியிலிருந்து கீழே குதித்து விட்டிருக்கிறான். உடல் முழுதும் கடுமையான காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்ததில் அங்கே அவன் இறந்து விட்டதாக அறிவித்திருக்கின்றனர். இதைப் பற்றி அவனது பெற்றோரிடம் பேசுகையில், மகனை இழந்த தீராத சோகத்தில் மூழ்கியிருந்த அவர்கள்... நாங்கள் எங்கள் மகனை நல்ல பள்ளியில் படிக்க வைத்து...அவனது எதிர்காலத்துக்கான சிறப்பான கல்வியை அளிக்க நினைத்ததைத் தவிர நாங்கள் வேறெந்த தவறையும் செய்யவில்லையே என்று மகனது நினைவில் மறுகுகின்றனர். மகனை இழந்து துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்கள் மேற்கொண்டு எதுவும் பேசும் நிலையில் இல்லை.

சில சமயங்களில் பெற்றோர்களின் பெருங்கனவுகளை பிள்ளைகளால் ஈடு செய்ய முடியாமலாகும் போது, அவர்கள் அந்தக் கனவுகளை தங்களது பிள்ளைகளின் உணர்வறிந்து மறுதலிக்கலாம். இல்லாத பட்சத்தில் இப்படித்தான் பிள்ளைகளை இழக்க நேரிடும். இதற்கு பல உதாரணங்களை கடந்த காலங்களில் நாம் கண்டிருந்த போதிலும் மீண்டும், மீண்டும் விரும்பாத கல்விப் பிரிவை தமது பிள்ளைகளிடம் திணிப்பதன் மூலம் மேலும் இம்மாதிரியான மரணங்கள் சம்பவிக்க காரணமானவர்களாக ஆகிப் போகும் பெற்றோரை என்ன சொல்ல?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com