தற்போது (1.09.2017) அம்பத்தூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை என சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை வலுவடைந்ததன் எதிரொலியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தைப் போல செப்டம்பரிலும் பரவலாக மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி சென்னை மக்களைப் பொருத்த வரையில் நல்ல செய்தி. கடந்த 150 ஆண்டு காலத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தான் அதிக மழை பொழிந்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் குமரி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் போன்ற பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்துள்ளதால் மேலும் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மிதமான மழையும் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


