
'என் பையன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டான்'
'அப்புறம்?'
'அழிச்சுட்டுத்தான் தாண்டுவான்'
ம.வேதவள்ளி, பொரவச்சேரி.
'மன்னர் இதுவரை புறமுதுகிட்டு ஓடியதே இல்லை...'
'சபாஷ்'
'யோவ்... ரிவர்ஸிலேயே ஓடிப் போயிடுவார்'
எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
'கனவுகள் தரும் பலன்னு புத்தகம் எழுதியிருந்தேன். ஒரே நாள்ல ஆயிரம்
பிரதி வித்திடுச்சி'
'எப்போ வித்துச்சு?'
'நேத்து ராத்திரி கனவுல சார்'
கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.
'ராத்திரி ஆனா பேசவே முடியலை டாக்டர்'
'ராத்திரி "ஆனா' பேச முடியலைன்னா என்ன? "ஆவன்னா', "இனா', "ஈயன்னா' பேசுங்களேன்.
எஸ்.வேல்அரவிந்த், திண்டுக்கல்.
'நேற்று திருடப் போன இடத்துல மாட்டிக்கிட்டேன்'
'அப்புறம்?'
'அது போலீஸ்காரர் வீடு. மாமூல் கொடுத்து தப்பிச்சு வந்தேன்'
கு.அருணாசலம், தென்காசி.
'தலைவர் மேடையிலே உள்ள எல்லாருக்கும் ஏன் விசிறி கொடுக்குறாரு?'
'கொஞ்ச நேரத்துல அனல் கக்குற மாதிரி பேசப் போறாராம்'
ம.வேதவள்ளி, பொரவச்சேரி.
'கமலா ஊர் பூரா காய்ச்சல் பரவுதாம்'
'நீங்க ஏன் பயப்படுறீங்க. பரவுறது மூளைக் காய்ச்சல்'
பி.பரத், கோவிலாம்பூண்டி.
'தினமும் காலையில் சேவல் கொக்கரக்கோன்னு கத்துதே ஏன்?'
'காலையில் மட்டுமல்ல... எப்பவும் கொக்கரக்கோன்னுதான் கத்தும்'
வி.ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.