என்ன நம்ம துணிக்கடைக்கு இத்தனை பெண்கள் வந்து சீக்கிரம் துணி எடுத்திட்டாங்க?
அவங்க எடுத்தது யூனிபார்ம் சாரி... முதலாளி''
**
டீக்கடை நடத்தி பெரும் நஷ்டம்
எப்பிடி?'
தண்ணி விற்கிற விலைக்கு பால்ல தண்ணி கலந்து வித்தேன். அதான்.'
- மணிகண்ட பிரபு, திருப்பூர்
**
சோப்பு போடறவங்களை கண்டாலே எங்க மானேஜருக்கு சுத்தமா பிடிக்காது
ஏன் அப்படி?
அவரே சோப்புப் போட்டுக் குளிக்காமல் சீயக்காய்த் தூளை தேய்ச்சுத்தான் குளிப்பாராம்.
**
என்ன கான்ஸ்டபிள்... அந்த வீட்ல எப்படி திருடு போச்சு?
எஸ்ஐ சார்... திருடன் பூட்டை உடைச்சிட்டு உள்ளே நுழைஞ்சிருக்கான் ஓராள் நுழையிற அளவுக்கு அவ்வளவு பெரிய பூட்டா அது?
**
தீபாவளி துணி எடுக்க வீட்டுக்காரரை விட்டுட்டு தனியா போறீங்களே?
நேற்றைக்கே தள்ளுபடி டோக்கன் வாங்க வரிசையில அவரை நிற்க வெச்சுட்டு வந்துட்டேன்'
**
தலைவரே நம்ம கட்சிக்காரங்க தீபாவளிக்கு சிறப்பு வாட்ஸ் அப் குரூப்ல உங்களையும் சேர்த்து இருக்காங்க எதுக்குய்யா?
பட்டாசு வாங்க காசு இல்லைன்னு சும்மாவாச்சும் சொன்னீங்கள்ல அதை உண்மைன்னு அவங்க நெனச்சுக்கிட்டாங்க. அதனால வாட்ஸ் அப்பை நீங்க ஓப்பன் பண்ணுனீங்கன்னா அதுல வெடிச்சத்தம் கேட்கும்''
**
இந்த டாக்டர் இதுக்கு முன்னே பட்டாசு கடை நடத்தி இருப்பார்ன்னு எப்படிச் சொல்றீங்க?
இருமல், சளி, காய்ச்சல் இருக்குன்னு சொன்னதுக்கு பாம்பு மாத்திரை வெடியைக் கொடுத்து கொளுத்தி ஜமுக்காளத்தை மூடி புகை பிடிங்கன்னு சொல்றாரே.
- முருகு. செல்வகுமார், சென்னை-19.
**
தலைவரே... தீபாவளிக்கு வீட்டுக்கு கூப்பிட்டு வெடி வெடிச்சு வெடிச்சதை எல்லாம் கேமராவுல கவரேஜ் பண்றீங்களே எதுக்கு?
சுற்றுச்சூழல் மாசு படாத ஆர்கானிக் வெடி வெடிச்சாருன்னு காட்டத்தான்
- முருகு. செல்வகுமார், சென்னை-19.
**
இந்த மத்தாப்பு சரியாகவே எரிய மாட்டேங்குது
எதிர்வீட்டுக்காரர் கிட்டே கொடுங்க.
அவர் பத்த வைக்கிறதுல பலே கில்லாடி
- கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
**
ஃபேஸ்புக் ஃபிரண்டிடம் கடன் வாங்கினது ரொம்ப தப்பாப் போச்சா... ஏன்?
ஃபேஸ்புக் ஓப்பன் பண்ற போதெல்லாம், கடன் பணம் எப்போ திரும்பக் கிடைக்கும்ன்னு பதிவு போடுறார்
கு.அருணாசலம், தென்காசி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜஸ்தான்: இந்திய - பாகிஸ்தான் எல்லையில் 10 கிலோ ஹெராயின், வெளிநாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

குப்பையில் கண்டெடுக்கப்பட் பழைமையான கல்வெட்டு

இன்றைய ராசி பலன்கள் (03.08.2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு பதவி உயர்வு!

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 03) - ! வெற்றி யாருக்கு?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



