'நீங்க செய்ற தவறுக்கெல்லாம் உங்க பையன் அடி வாங்குறான்'
'என்ன சார் சொல்றீங்க?'
'ஹோம் ஒர்க் பூராவும் தப்பு, தப்பா இருக்கு'
- கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
**
'தலைவர் மைக்செட்காரங்ககிட்ட லஞ்சம் வாங்கிட்டாரா எப்படி?'
'மேடையில பேசும் போது அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை சிறந்த ஒளி, ஒலி அமைப்புக்கு ராஜா சவுண்ட் சர்வீஸ்னு சொல்றாரே'
- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
**
'ஏங்க என்கிட்டே உங்களுக்குப் பிடிச்சது என்னோட அன்பா? அழகா?'
'அப்பப்போ இப்படி ஜோக் அடிக்கிறியே அந்த நகைச்சுவை உணர்வுதான்'
- த.ஜோதி, சென்னை-19.

இவர்: உங்க நகைச்சுவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது சார்
அவர்: அட, அப்படியா?
இவர்: ஆமா சார் முதல்ல சிரிச்சுடறோம், அப்புறம்தான் ஏன் சிரிச்சோம்னு சிந்திக்கிறோம்.
- எஸ்.பொருநைபாலு, திருநெல்வேலி.

'அந்த கிளி ஜோசியர் நவீனமா கிளி ஜோசியம் சொல்றாரா? எப்படி?'
'லேப் டாப்ல கிளி வருது... அது சீட்டு எடுத்து கொடுக்குது'
- பி.பரத், கோவிலாம்பூண்டி.
'என்னடா "கெக்கு'னு எழுதியிருக்கிறே.. அது 'கொக்கு'டா மக்கு..'
'நீங்க தானே நொண்டிக் 'கொக்கு'னு சொன்னீங்க அதான் காலை எடுத்திட்டேன்'
- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
'நாமதான் ஒரு சேலை வாங்கினா ஒரு குடம் இலவசமாத் தர்றோம்மே... அப்படியிருந்தும் அந்தக் கடையில் கூட்டம் நிரம்பி வழியுதே?''
'அவங்க ஒரு சேலை வாங்கினா ஒரு குடம் தண்ணி இலவசம்ன்னு அறிவிச்சிருக்காங்களே'
- பி.பால்ராம மூர்த்தி, அம்பாசமுத்திரம்.
'உங்களை தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன்னு மிரட்டுறாரே... கொஞ்சங்கூட பயமில்லாம இருக்குறீங்க?'
'எல்லா ஊர்லயும்தான் தண்ணி இல்லை.... இதுல இவர் என்ன புதுசா மாத்திடப் போறாரு?'
- ரா.ராஜதுரை, சீர்காழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சஞ்சு சாம்சனை யாருடனும் ஒப்பிட முடியாது: ரியான் பராக்

ஈரான் மீண்டும் கத்தாரை தாக்கினால், உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும்! - டிரம்ப் எச்சரிக்கை!

”வார்த்தைக்கு கண்டனம்! வாழ்க்கைக்கு?” தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

மார்கெரிட்டா தொகுதியில் பிரதீக் போட்டியிடாதது ஏன்? காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி காரணமா?
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

