கறுப்புப் பட்டியலில் தப்லிகி ஜமாத்துக்கு வந்த 960 வெளிநாட்டினர், விசா ரத்து; சட்ட நடவடிக்கை!

தில்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டவர்கள் 960 பேரைக் கறுப்புப் பட்டியலிட்டு, அவர்களுக்கு விசாக்களையும் மத்திய உள்துறை ரத்து செய்துள்ளது.

மேலும் இவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மாநில அரசுகளுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இவர்கள் அனைவரும் விசாவில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை மீறி தப்லிகி ஜமாத் நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அயல்நாட்டவர் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு  தில்லி காவல்துறை மற்றும் மாநிலங்களின் காவல்துறைத் தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதுபற்றி ட்விட்டரின் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com