2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஒத்திவைப்பு

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத்  திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹிந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 4:24 pm

DIN

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத்  திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹிந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரைத்  திருவிழா கோலாகலமாக நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், மதுரை, திண்டுகல் மாவட்டம் மற்றும் கேரளத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை, பால்குடம், காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர். சித்திரைத்  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பல்லக்கு, தேரோட்டம், ஊர் பொங்கல் ஆகியவை தொடர்ந்து 8  நாள்கள் வரை நடைபெறும். இந்த நாள்களில் 24 மணி நேரமும் கோயிலில் நடைதிறக்கப்பட்டு சுவாமி தரிசனம் நடைபெறும்.

இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வரும் மே 3ம்-தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால், கோயிலில் வழக்கமாக சித்திரை முதல் வாரம் செவ்வாய்க் கிழமையன்று (ஏப்.21)  நடைபெறும் கொடியேற்றம், ஏப். 22-ம் தேதி நடைபெறும் கம்பம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, வரும் மே 3-ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை  தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இந்து அறநிலையத் துறை கோயில் நிர்வாக அலுவலர் சுரேஷ் அறிவித்துள்ளார்.

மேலும், கௌமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மே 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறவிருந்த பல்லக்கு, தேரோட்டம், ஊர் பொங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.