தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

'இந்திய வளர்ச்சி விகிதம் 1 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும்!'

2020 ஆண்டில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சி விகிதமும் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

லண்டன்: 2020 ஆண்டில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சி விகிதமும் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் புதிதாக, உலகளாவிய பொருளாதார கணிப்புகளை ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

புதிதாகக் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. 

இந்தியா, சீனா இரு நாடுகளிலுமே இதுதான் நிலைமை, 1980-க்குப் பிறகு இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் எப்போதுமில்லாத அளவில், உலகளவிலான மொத்த பொருளாதார உற்பத்தியும்கூட 3.9 சதவிகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் முதன்மைப் பொருளியலாளர் பிரையன் கூல்ட்டன் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியளவில் பெரும் மாற்றங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.