நாளை(டிச.23) மத்திய அமைச்சரவைக் கூடுகிறது

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த 27 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது.

மேலும், பாதுகாப்பு அமைச்சரவைக் குழு மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டங்களும் நாளை நடைபெறுகின்றது.

இந்தக் கூட்டத்தில் புதிய மரபணு கரோனா பரவல், கரோனா தடுப்பூசி நிலை, விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குமுன், டிசம்பர் 16ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com