

சென்னை: தேசிய விவசாய தினத்தை முன்னிட்டும் உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளதார்.
இதுதொடர்பாக அவரது சுட்டுடரை பக்க பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"உழந்தும் உழவே தலை"
உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த "தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை" அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் அனைத்து மனித உயிர்களுக்கும் உணவளிக்கும் கடவுள்களின் தினமான தேசிய விவசாயிகள் தினத்தில் தேசத்தின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை ஆதாரமான நம் விவசாய பெருமக்களை இன்றுபோல் என்றும் அரவணைப்போம் என தாய்த்தமிழ் உறவுகள் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.