ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சீனாவுக்குத் தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

சீனாவுக்குத் தக்கதொரு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

சீனாவுக்குத் தக்கதொரு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

எல்லையில் நடந்த இந்திய - சீன மோதல் தொடர்பாக இன்று காணொலி வாயிலாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவாகப் பிரதமர் மோடி பேசினார்.

"நமது எல்லைக்குள் அவர்கள் ஊடுருவவும் இல்லை, எந்த நிலையையும்  அவர்கள் (சீனா) கைப்பற்றவும் இல்லை"  என்று தெரிவித்த மோடி, "நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் எய்தினர் என்றும் பாரத மாதாவுக்கு சவால் விடுத்தவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"நாட்டைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ, ராணுவத்தை  நிறுத்துவதோ, நடவடிக்கையோ அல்லது எதிர் நடவடிக்கையோ, அதை இந்தியப் படைகள் செய்துகொண்டிருப்பதாக"வும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

முன்னதாகப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இவ்விஷயத்தில் உளவுத் துறைத் தோல்வி எதுவுமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.