ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எல்லையில் முந்தைய நிலை திரும்ப வேண்டும்: சோனியா காந்தி

எல்லையில் மோதலுக்கு முந்தைய நிலை மீட்கப்பட்டு விடும் என்ற உறுதிமொழியை நாடு எதிர்பார்க்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

News image
சோனியா காந்தி
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

எல்லையில் மோதலுக்கு முந்தைய நிலை மீட்கப்பட்டு விடும் என்ற உறுதிமொழியை நாடு எதிர்பார்க்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா - சீனா மோதல், இந்தியத் தரப்பில் 20 ராணுவத்தினர் உயிரிழப்பு என்ற நிலையில், காணொலி வாயிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சோனியா காந்தி, சரத் பவார், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, மலைப் பகுதியில் தற்போதைய நிலைமை என்று கேள்வி எழுப்பியதுடன், எதிர்க்கட்சிகளுக்குத் தொடர்ந்து நிலவரம் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

"எல்லைப் பகுதி பதற்றத்தைத் தணிப்பதற்கான அனைத்து வழிவகைகளிலும் நாம் தோற்றுவிட்டோம், மதிப்புமிக்க நேரத்தை இழந்துவிட்டோம், விளைவு 20 உயிர்களின் இழப்பு" என்று குறிப்பிட்ட சோனியா, இது நமது உளவு அமைப்பின் தோல்வியா என்றும் வினவினார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசுகையில், நாம் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,எனினும் சீனா நுழைவதை அனுமதித்துவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

நம்முடைய வீரர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தார்களா, இல்லையா  என்பது பற்றிக் குறிப்பிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான சரத் பவார், இவையெல்லாம் சர்வதேச உடன்பாடுகளால் முடிவு செய்யப்படுகின்றன, இதுபோன்ற சிக்கலான தருணங்களில் அவற்றை மதிக்க வேண்டும் என்றார்.

நாடு முழுவதும் சீனாவின் மீது கோபம் கொண்டிருப்பதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.