

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுடன் நடந்த மோதலின்போது காணாமல்போனதாகக் கருதப்பட்ட 17 பாதுகாப்புப் படை வீரர்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஏற்கெனவே, இந்த மோதலில் ஏராளமான நக்சல்கள் கொல்லப்பட்டதாகவும் 17 வீரர்களைக் காணவில்லை என்றும் முதல்வர் பூபேஷ் பாகல் குறிப்பிட்டிருந்தார்.
மோதலின்போது காணாமல்போன வீரர்களைத் தேடும் பணியில் காலை முதலே சிறப்பு அதிரடிப் படையினரும் கோப்ரா அணியினரும் ஈடுபட்டனர்.
சின்டாகுபா பகுதியிலுள்ள கோரஜ்குடா மலைப் பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் பாதுகாப்புப் படை வீரர்கள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது, இந்த மோதல் நடைபெற்றது. இதில் 15 படை வீரர்கள் காயமுற்றனர். மேலும் 17 பேர் உயிரிழந்திருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.