கரோனா: உறவினர் ஒருவருமில்லை, மனைவி விடியோ அழைப்பில் பார்க்க கணவரின் இறுதிச்சடங்கு
தில்லி அருகே நொய்டாவில் உறவினர்கள் ஒருவரும் அருகில் இல்லாமலேயே கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த 60 வயதான ஒருவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.


தில்லி அருகே நொய்டாவில் உறவினர்கள் ஒருவரும் அருகில் இல்லாமலேயே கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த 60 வயதான ஒருவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, திங்கள்கிழமை
அவருடைய மனைவியும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்தவாறே விடியோ அழைப்பின் மூலம் கணவருடைய இறுதிச் சடங்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
இந்தத் தம்பதியரின் மகளோ தந்தையின் இறப்புக்கு வர முடியாதபடி குஜராத்தில் சிக்கிக் கொண்டுவிட்டார். வாராணசியிலுள்ள மேலும் சில உறவினர்களோ தங்களால் தில்லி கௌதம் புத் நகருக்கு வந்துசேர இயலாது எனத் தெரிவித்துவிட்டனர்.
இறந்தவரின் வீட்டுக்கு அருகே வசித்த ஒருவர்கூட பொறுப்பேற்றுக் கொள்ள முன்வரவில்லை.
மாவட்ட நிர்வாகமோ, மாவட்ட நல்வாழ்வுத் துறையோ கண்டுகொள்ளவில்லை.
இறுதிச் சடங்குகளுக்குப் பொறுப்பேற்க மறுத்துவிட்ட மாவட்ட நிர்வாகம், அவரை அநாதை என்று அறிவிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டுமானால் 72 மணி நேரமாகும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
அவர்களிடமிருந்து எவ்வித ஒத்துழைப்பும் இல்லாத நிலையில், வேறு வழியின்றி, இறந்தவரின் மகளிடம் ஒப்புதல் கடிதம் பெற்று, அவர் சிகிச்சை பெற்று இறந்த தனியார் மருத்துவமனையே முன்வந்து இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி, செவ்வாய்க்கிழமை மாலையில் சடலத்தை எரியூட்டச் செய்தது.
இறந்தவரின் மனைவி மட்டும், கணவரின் இறுதி நிகழ்வுகளை விடியோ அழைப்பின் மூலம் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...