அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 92.49% ஆக உயர்வு: உயிரிழப்பு 1.48% ஆக குறைவு

நாடு முழுவதும் கரோனாவில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.48 சதவீதமாக குறைந்துள்ளது என்றுமத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 5:37 am

DIN


புதுதில்லி: நாடு முழுவதும் கரோனாவில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.48 சதவீதமாக குறைந்துள்ளது என்றுமத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 45,674 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 85,07,754-ஆக அதிகரித்தது.

அதே காலஅளவில், நாடு முழுவதும் 49,083 போ் தொற்றில் இருந்து குணமடைந்தனா். இதனால் கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 78,68,968-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 559 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,26,121-ஆக அதிகரித்தது. உயிரிழப்பு விகிதம் 1.48-ஆக உள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 10-ஆவது நாளாக, 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 5,12,665 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 6.03 சதவீதமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நவம்பா் 7-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 11,77,36,791 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; அதில், சனிக்கிழமை மட்டும் 11,94,487 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.