நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு, கனிமொழி உதவி

காஷ்மீரில் லடாக் பகுதியில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திட்டங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்குச் சென்று அமைச்சர் கடம்பூர் ராஜு, கனிமொழி ஆகியோர் நேரில் சென்றனர்.

News image

லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் அமைச்சர் கடம்பூர் ராஜு

Updated On :20 நவம்பர் 2020, 8:10 am

DIN

காஷ்மீரில் லடாக் பகுதியில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திட்டங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்குச் சென்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர்  அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், ராணுவ வீரரின் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு, தன்னுடைய சொந்த நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். கருப்பசாமி குழந்தைகளின் கல்விக்கும் அவரது மனைவி தமயந்தியின் வேலைவாய்ப்புக்கும் அரசுத்  தரப்பில் முழு உதவி செய்யப்படும் என்றார்.

மேலும், ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்கு திமுக தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான கனிமொழியும் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கினார். எம்எல்ஏ கீதா ஜீவன் உள்பட கட்சியினர் உடனிருந்தனர்.

        ராணுவ வீரரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் கனிமொழி  

        ராணுவ வீரரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் கனிமொழி  

ராணுவத்தில் நாயக் பொறுப்பில் பணியாற்றி வந்த கருப்பசாமி காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில்  பணியிலிருந்த போது  நேற்று முன்தினம்  நள்ளிரவு அப்பகுதியில் பனி மலையில் நிகழ்ந்த  வாகன விபத்தில்  உயிரிழந்தார்.

கருப்பசாமி வயது 32 இவருக்கு திருமணமாகி  தமயந்தி என்ற மனைவியும்,  கன்னிகா வயது 7, வைஷ்ணவி வயது 4, பிரதீப் குமார் வயது 1 ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் நாளை திட்டங்குளம் கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.