தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

14 வயதில் பட்டதாரியான முதல் இந்திய சிறுவன்!

ஹைதராபாத்தை சேர்ந்த பதினான்கு வயது சிறுவன் அகஸ்திய ஜெய்ஸ்வால், இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயது பட்டதாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.  

அகஸ்திய ஜெய்ஸ்வால்

Published On :27 ஜனவரி 2024, 11:25 pm IST


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த பதினான்கு வயது சிறுவன் அகஸ்திய ஜெய்ஸ்வால், இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயது பட்டதாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.  

உஸ்மானியா பல்கலைக்கழகம் நடத்தும் பி.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம் படிப்பிற்கான இறுதியாண்டு தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

இதில், தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் வீரரும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த சிறுவனுமான அகஸ்தியா ஜெய்ஸ்வால் தேர்ச்சி பெற்று இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் (14 வயதில்) பட்டப்படிப்பை முடித்த முதல் சிறுவன் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அகஸ்தியா ஜெய்ஸ்வால் கூறியதாவது:
"தெலங்கானாவில் 9 ஆவது வயதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் சிறுவனான நான், 11 ஆவது வயதில் 63 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று  முதல் சிறுவன் என்ற பெருமையை பெற்ற நான், உஸ்மானியா பல்கலைக்கழகம் நடத்தும் பி.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தேன். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றதை அடுத்து, இந்தியாவில் மிகக்குறைந்த வயதில் (14 வயது) பட்டதாரியான முதல் சிறுவன் என்ற பெருமையை பெற்றிருக்கிறேன்" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

மேலும் "என் பெற்றோர், எனது ஆசிரியர்களின் ஆதரவோடு, எதுவும் சாத்தியமற்றது என்பதை நிரூபிக்கும் சவால்களை நான் செய்து வருகிறேன்.

தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் வீரரான அகஸ்தியா,  ஏ முதல் இசட் வரை உள்ள எழுத்துக்களை 1.72 வினாடிகளில் தட்டச்சு செய்யும் திறமையையும், 100 வரையிலான பெருக்கல் வாய்ப்பாடுகளை சொல்லும் திறமையும், இரு கைகளாலும் எழுதுவேன். நான் ஒரு சர்வதேச ஊக்க பேச்சாளர்."  நான் மருத்துவராக விரும்புகிறேன். எனவே அடுத்து மருத்துவம் படிப்பேன் என்று கூறினார்.

அவரது தந்தை அஸ்வினி குமார் ஜெய்ஸ்வால் கூறுகையில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறப்பு திறமை உள்ளது என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தினால், ஒவ்வொரு குழந்தைகளாலும்  வரலாற்றை உருவாக்க முடியும் என்று கூறினார்.

தாய் பாக்யலட்சுமி கூறுகையில், “நாங்கள் எப்போதும் அவனிடம் பாடங்களைப் புரிந்து கொள்ளும்படி கூறுவோம். அவன் எப்போதும் எங்களிடம் கேள்விகளைக் கேட்பான். நாங்கள் அவனுக்கு புரியும் நடைமுறையில் பதிலளிப்போம். ” என்று கூறினார்.

இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் பட்டம் பெற்றுள்ள அகஸ்தியாவுக்கு, அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.