பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அஞ்ச மாட்டேன்; அநீதிக்குத் தலைவணங்க மாட்டேன்: ராகுல்

இவ்வுலகில் யாருக்கும் நான் அஞ்ச மாட்டேன்... எவருடைய அநீதிக்கும் நான் தலைவணங்க மாட்டேன்...

News image
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி
Updated On :2 அக்டோபர் 2020, 4:08 am

DIN

யாருக்கும் அஞ்ச மாட்டேன்; அநீதிக்குத் தலைவணங்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

காந்தி ஜெயந்தியையொட்டி, சுட்டுரையொன்றை வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி.

"இவ்வுலகில் யாருக்கும் நான் அஞ்ச மாட்டேன்... எவருடைய அநீதிக்கும் நான் தலைவணங்க மாட்டேன்,  பொய்யை உண்மையால் நான் வெல்வேன், மேலும் பொய்யை எதிர்க்கும்போதான அனைத்து  இன்னல்களையும் என்னால் தங்கிக்கொள்ள முடியும்.

காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்."

என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.

உத்தரப் பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கின் தொடர்ச்சியாக கொல்லப்பட்ட மனீஷாவின் குடும்பத்தினரைச் சந்திக்க வியாழக்கிழமை சென்றபோது, ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டனர்.

மூன்று பிரிவுகளில் வழக்குத் தொடுத்து, விருந்தினர் இல்லத்தில் மாலை வரை காவலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை மாலையில் உத்தரப் பிரதேச அரசு விடுதலை செய்தது.

இந்த நிலையில் அஞ்ச மாட்டேன் என்று சுட்டுரைத்துள்ளார் ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.