தோனியின் மகளுக்கு மிரட்டல்: குஜராத்தில் 12-ஆம் வகுப்பு மாணவன் கைது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 12ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 12ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சீசன் வரை வெற்றிகரமான அணியாகத் திகழ்ந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பா் கிங்ஸ், இந்த சீசனில் 7 ஆட்டங்களில் விளையாடி 5-ல் தோல்வியடைந்துள்ளது. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே சென்னை வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதே தோல்விக்கு காரணம் என விமா்சனம் எழுந்துள்ளது. 

சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வருவதால் கோபமடைந்துள்ள ரசிகர்கள் சிலர் தோனியின் மகள் ஜிவா-வின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பாலியல் ரீதியிலான மிரட்டல்களை விடுத்துள்ளார்கள். அதேபோல தோனியின் மனைவி சாக்‌ஷிக்கும் அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்கள். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக ராஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொடர் மிரட்டல் காரணமாக ராஞ்சியில் உள்ள தோனி வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக குஜராத் மாநிலம் கட்ச் பகுதியின் முந்த்ராவைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவனை ராஞ்சி அழைத்துச்சென்று காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com