மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரை அருகே அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் வெட்டிக்கொலை

மதுரை அருகே அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

News image
கொலை செய்யப்பட்ட அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணன்.
Updated On :12 அக்டோபர் 2020, 6:12 am

DIN

மதுரை அருகே அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் (50) மற்றும் முனுசாமி (40) ஆகிய  இருவரும் இந்தப் பகுதியில் மலையடிவாரத்தில் ரத்த காயங்களுடன் இறந்து  கிடந்தனர்.

இவர்கள் இறந்து கிடப்பதைப் பார்த்து அப்பகுதியில் உள்ளவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களைக் காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணன் மற்றும் முனுசாமி இருவரையும் மர்ம கும்பல் வெட்டி படுகொலை  செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

கருப்பாயூரணி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.