மேட்டூர் அணை நீர்மட்டம் 99.11 அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 99.11 அடியாக இருந்தது.

மேட்டூர் அணை (கோப்பிலிருந்து)

மேட்டூர் அணை (கோப்பிலிருந்து)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 99.11 அடியாக இருந்தது.
அணையில் தண்ணீர் இருப்பு 63.69 டி.எம்.சி.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்குள் வினாடிக்கு நீர் வரத்து 24,036 கன அடியிலிருந்து 26,102 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 16,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளதால் ஞாயிறு காலை 98.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.11 அடியாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...