ஓசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை நாளை தொடங்குகிறார்
ஓசூர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை நாளை (ஆகஸ்ட் 5) துவங்கி வைக்க உள்ளார்.


ஓசூர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை நாளை (ஆகஸ்ட் 5) துவங்கி வைக்க உள்ளார்.
அவரை ஓசூர் விமான நிலையத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், பர்கூர் எம்எல்ஏ மதியழகன், முன்னாள் எம்எல்ஏ இசை சத்யா, திமுக முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் அவர்கள் வீட்டிற்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்த பிரகாஷ் அவர்களின் மனைவி சிவம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து நட்சத்திர விடுதியில் இன்று இரவு தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...