47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி: வட்டார போக்குவரத்து துறை சார்பில் காரோனா விழிப்புணர்வு முகாம் 

சிவகாசியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் காரோன விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

News image
காரோனா தோற்று ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கையா.
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:16 am

DIN

சிவகாசியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் காரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டார போக்குவரத்து துறை சார்பில் வெள்ளிக்கிழமை காரோனா ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சிவகாசி பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் கடை உரிமையாளர்கள் ஆகியோரிடம் காரோனா தோற்று ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கையா வழங்கினார்.

Story image

ஒலி பெருக்கி மூலம் காரோனா தோற்று ஒழிப்பு விழிப்புணர்வு அறிவுரையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கையா.

பின்னர் அவர் வேனில் இருந்த ஒலி பெருக்கி மூலம் தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவவேண்டும். மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து வேன் மூலம் சிவகாசியில் உள்ள பிரதான கடைவீதி பகுதி வழியே திருத்தங்கள் சென்று அங்குள்ள கடை வீதி பகுதிகளில் தோற்று ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் சிவகாசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.