கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நாட்டில் புதிதாக 40,120 பேருக்கு தொற்று: 585 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 40,120 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:23 am

DIN

புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 40,120 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 585 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், நாட்டில் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் மீண்டும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது. 

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 40,120 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,21,17,826-ஆக உயா்ந்துள்ளது. 

42,295 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,13,02,345 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,85,227-ஆக உள்ளது. தேசிய அளவில் மீட்பு விகிதம் 97.46 சதவிகிதமாக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 1.20 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 585 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,30,254-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34 சதவிகிதமாக உள்ளது.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 52,95,82,956 கோடியாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வியாழக்கிழமை மட்டும் 57,31,574 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 48,94,70,779 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.