ரூ.150 கோடியில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும்: பழனிவேல் தியாகராஜன்

காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ரூ.150 கோடியில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும்: பழனிவேல் தியாகராஜன்


சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.  

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* ரூ.6000 கோடி மதிப்பில் இந்திய அளவில் கடல் மீன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

* மீன்பிடிதுறைமுகங்கள், மீன் இறங்குதளங்களை அமைப்பதற்காக ரூ.433.97கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* மீனவருக்கான சேமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்திற்காக ரூ.303 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*ரூ.6.25 கோடி செலவில் புதிதாக 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைப்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

* காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக் கோடு சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

* மீன்பிடி இறங்குதளங்களை மேம்படுத்துவதற்காக ரூ.143 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com