மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்பிலான 1.01 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2021, 12:03 pm

DIN

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்பிலான 1.01 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் விமானத்தில் பயணம் செய்த பயணியின் இருக்கைக்கு கீழே மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்பிலான 1.01 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.