தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை செளந்தர்ராஜனுக்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு தமிழக முதல்வர் வாழ்த்து
Updated On :18 பிப்ரவரி 2021, 1:43 pm

DIN

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை செளந்தர்ராஜனுக்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுவை யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடி, அந்தப் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன், புதுவை துணைநிலை ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என குடியரசுத் தலைவா் மாளிகை அறிவித்தது.

இந்நிலையில்,  தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். 

இந்நிலையில் அவருக்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்து செய்தியில் அவர், “மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், இன்று (18.2.2021) புதுச்சேரி துணை நிலை ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) பதவியேற்றமைக்கு, எனது சார்பாகவும், தமிழ்நாடு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.