6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து (கோப்புப்படம்)
Updated On :8 ஜூலை 2021, 11:38 am

DIN

மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் இணையமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்து செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 

தொலைபேசி வாயிலாக எல்.முருகனை தொடர்பு கொண்ட அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.