சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒற்றைத் தலைமை முழக்கங்களுக்கு மத்தியில் தொடங்கிய அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் வெள்ளிக்கிழமை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜூலை 2021, 11:51 am

DIN

சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் வெள்ளிக்கிழமை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சி ஆட்சியை இழந்தது. அதனைத் தொடர்ந்து அக்கட்சி ஆட்சியை இழந்தது. 

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்வி, சசிகலா வெளியிட்டு வரும் ஆடியோ விவகாரம் மற்றும் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கியத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

முன்னதாக கட்சி அலுவலகத்திற்கு வெளியே தொண்டர்கள் ஒற்றைத் தலைமை ஓபிஎஸ் என முழக்கமிட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.