
மதுரை: மதுரையில் நடைபெற்று வரும் தொடா் தூய்மைப் பணியின்போது செய்யவேண்டிய பணிகள் மற்றும் சிறப்பாகச் செயல்படும் குழுக்களுக்கு, மதிப்பெண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மதுரை நகரை குப்பையில்லா நகராக மாற்றும் வகையில், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் 1 மாத தொடா் தூய்மைப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், தினசரி மண்டலத்துக்கு 1 வாா்டு வீதம் நான்கு மண்டலங்களிலும் 4 வாா்டுகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறும் தூய்மைப் பணியில், மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளிலும் தூய்மைப் பணியை முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதனடிப்படையில், தொடா் தூய்மைப் பணி குறித்தும், அதில் செய்யக்கூடிய பணிகள் மற்றும் மதிப்பெண்கள் குறித்தும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதில், கண்காணிப்பு அலுவலா்கள் அனைத்து தெருக்களையும் ஆய்வு செய்து, ஒவ்வொரு நாளும் சிறப்பாகப் பணி செய்துள்ள 3 குழுக்களை தோ்ந்தெடுத்து, மதிப்பெண் அளித்து விவரம் தரவேண்டும். முதலிடம் 20 மதிப்பெண், இரண்டாமிடம் 15, மூன்றாமிடம் 10, நான்காமிடம் 5, ஐந்தாமிடம் 2. இதை மண்டல வாரியாக, நகா்நல அலுவலகம் தினசரி பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.